தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் -சொல்வது என்ன?


தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - சொல்வது என்ன?


தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. அது பற்றிய ஒரு நடுநிலையான அலசல் இது.

இரண்டு பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் வெற்றி என்று சொல்லிக் கொண்டு உள்ளன.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், இது திமுகவின் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட குறைவாகவும், அதிமுக பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட அதிகமாகவும் பெற்றுள்ளது தெரிய வருகிறது.

இது நிச்சயமாக அதிமுகவுக்கு நம்பிக்கை தரும் முடிவுதான். ஏனெனில், பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை பார்த்து அதிமுக தேய்ந்து வருவதாக நினைத்தவர்களுக்கு அந்த எண்ணம் தவறு என்பதை இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் காட்டி இருக்கின்றன.

செல்வி ஜெயலலிதா விட்டுச் சென்ற அதிமுகவின் இமேஜ் மீட்கப் பட்டு வருவதை முடிவுகள் காட்டுகின்றன.

இந்த மீட்பில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பாராட்டியே ஆகவேண்டும். ஜெயலலிதாவே நினைத்துப் பார்த்திராத வழியில், அரசு செலவில் பொங்கல் பரிசுத்த தொகுப்புடன் ருக்கு.1000 வழங்கப் படும் என்று அறிவித்து மக்களின் சாதகமான மனநிலையை உருவாக்கினார் அவர். இப்படி அரசுப்  பணத்தை  பரிசு என வழங்குவதில் நமக்கு கருத்து மாறுபாடு இருப்பினும், இந்த மாதிரி திட்டமிட்டு மக்களின் மனத்தைக் கவர்ந்த அவரின் சாமர்த்தியம், அவரின் அரசியல் அனுபவத்தைக் காட்டுவதாகவே உள்ளது. இந்த எட்டரை  ஆண்டுகளில், ரேஷன் பொருட்கள் வழங்குவதிலும், மின்சாரம் வழங்குவதிலும் அதிமுக அரசு நன்றாகவே செயல்பட்டது என்று தான் கூற வேண்டும். சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்றவையும் பிரச்னைகள் இன்றி செயல்பட்டன. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

திமுக சுமார் 10 சதவீதம் அதிக இடங்களை பெற்று இருந்தாலும், முன்பை விட இப்போது அதற்கு ஓட்டுக்கள் குறைந்து இருப்பதை அக்கட்சி உணர வேண்டும். எதற்கெடுத்தாலும் அரசை குறை கூறிக் கொண்டு இருக்காமல், தாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செயல் படுத்துவோம் என்று மக்களுக்கு தெரிவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.  மக்களின் மனநிலை மாறி வருகிறது. பேச்சால் மட்டுமே மக்களை இனி அதிகம் கவர முடியாது.

எப்படியோ, இனி இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் எடப்பாடி அரசு நினைத்தால் மாநிலம் முழுதும் மக்களைத் தீவிரமாக சந்தித்து அரசின் நல்ல திட்டங்களை பற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம்  அடுத்த சட்டசபைத் தேர்தலிலும் வெற்றிவாகை சூட முடியும்.

கருத்துகள்

POPULAR IN THIS SITE